full screen background image

பட ரிலீஸுக்கு முன்பேயே ‘ரம்’ படத்தின் தெலுங்கு உரிமை விற்பனை

பட ரிலீஸுக்கு முன்பேயே ‘ரம்’ படத்தின் தெலுங்கு உரிமை விற்பனை

அனிரூத் இசையமைத்து, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் அந்தஸ்தானது,  நாளுக்கு நாள் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் உயர்ந்து கொண்டே போகிறது.

அறிமுக இயக்குநரான சாய் பரத்தின் இயக்கத்தில், ஹரி ஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்து பாடிய  ‘ரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஹோலா அமிகோ’, இசை பிரியர்களை மட்டுமில்லாமல் அனைத்து  இளைஞர்களையும் அதிகளவில் கவர்ந்துவிட்டது. ஒரு ஹாரர் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பது இதுதான் முதல் முறை.

ரம் படத்திற்கு கூடுதல் பெருமையாக இதன் தெலுங்கு உரிமையை, ஹைதராபாத்தை சார்ந்த ‘சுராஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’,  ஒரு பெருந்தொகைக்கு வாங்கி இருக்கிறது.

ஆந்திராவில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும்  ‘சுராஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ ஏற்கனவே ‘சிங்கம் 3’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘டோரா’ ஆகிய படங்களின்  தெலுங்கு உரிமையையும் பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“எங்கள் ‘ரம்’ படத்தின் தெலுங்கு உரிமையை, ‘சிங்கம் 3’ மற்றும் ‘டோரா’ படங்களின் உரிமைகளை வாங்கியுள்ள  ‘சுராஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அனிரூத்தின் இசை எங்களுக்கு பக்கபலமாய் அமைந்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். மேலும் பல சுவாரசியங்களை ‘ரம்’ படத்திற்காக நாங்கள் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்…’ என்கிறார் ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய ராகவேந்திரா.

Our Score