‘சாட்டை’ அன்பழகன் இயக்கியிருக்கும் ‘ரூபாய்’ திரைப்படம்

‘சாட்டை’ அன்பழகன் இயக்கியிருக்கும் ‘ரூபாய்’ திரைப்படம்

God Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான  பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஆர்.ரவிச்சந்திரனின் இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்.’

இந்தப் படத்தில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                                                         

மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – ஏ.பழனிவேல், நடனம் – நோபல், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், நிர்வாகத் தயாரிப்பு – ஜே.பிரபாகர், இணை தயாரிப்பு – ஆர்.ரவிச்சந்திரன், தயாரிப்பு – பிரபு சாலமன், எழுத்து, இயக்கம் – அன்பழகன்.

படம் பற்றி   இயக்குநர் அன்பழகன் பேசும்போது, “பணம் எல்லோருக்கும் அவசியம்தான். அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதைத்தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

பரணி(கயல் சந்திரன்), பாபு(கிஷோர் ரவிச்சந்திரன்) இருவரும்  நெருங்கிய நண்பர்கள். இரண்டு நாளைக்குள் லாரி  டியூ கட்டவில்லை என்றால், இவர்களின் ஒரே சொத்தான லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு சவாரி வருகின்றனர்.

வந்த இடத்தில் குங்குமராஜன் (சின்னி செயந்த்), பொன்னி (கயல் ஆனந்தி) இருவரையும் சந்திப்பதால் இவர்களோடு சேர்ந்து வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இறுதியில் அந்த பிரச்சனையில் இருந்து நால்வரும் மீண்டார்களா..? இல்லையா..? என்ற பதிலுக்காக பயணம்தான் இந்த ரூபாய்.

இதை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கும் மாதிரியான தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக ரூபாய் இருக்கும். படம் விரைவில் வெளிவர உள்ளது…” என்றார் இயக்குநர் எம். அன்பழகன்.




error: Content is protected !!