பத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்

பத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’.

தமிழ் தெலுங்கு கன்னடம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இந்த ‘ரூம்’ திரைப்படம் தயாராகிறது.

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்.  இவர் ’அவள் பெயர் தமிழரசி’,  ’நீர்ப்பறவை’,  ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு படத்தின் ஒளிப்பதிவை  கவனிக்க, வினோத் யஜமான்யா இசையமைக்கிறார். இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 

’குற்றம் கடிதல்’, ‘ஹவுஸ் ஓனர்’ என இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முக்கியமான படங்களுக்கு படத் தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம், இந்த ‘ரூம்’ படத்திற்கும் படத் தொகுப்பு செய்கிறார்.

பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான பத்மாமகன் இந்த ‘ரூம்’ படத்தை இயக்குகிறார். 

படத்தின் ஹைலைட்டான அம்சமே படத்தின் பெரும் பகுதியான காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.

அந்த வகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.




error: Content is protected !!