“ரோகிணி மிகச் சிறந்த நடிகை” – இயக்குநர் சரணின் புகழாரம்..!

“ரோகிணி மிகச் சிறந்த நடிகை” – இயக்குநர் சரணின் புகழாரம்..!

தமிழ்த் திரையுலகத்தில் மிகச் சிறந்த நடிகைகளின் பட்டியலில், நடிகை ரோகிணிக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு!

‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் ‘பட்டாளம் சுந்தரிபாய்’ பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு நேரெதிரான ‘லதாம்மா’ என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான தாய் வேடத்தில் ரோகிணி சிறப்பாக நடித்திருக்கிறாராம்.

இது தொடர்பாக பேசிய அப்படத்தின் இயக்குநரான சரண், “நான் ரோகிணியிடம் படத்தின் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார். அவருடனான உரையாடல்கள், காட்சி விவரங்களைக்கூட அதன் பின் சைகை மொழியிலேயே சொல்லும்படி பணித்தார்.

கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது.

படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி..!

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் காட்சி முடிந்தவுடன்கூட அவர் அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் பிடித்தது!

படத்தைத் திரையில் காணும்போதும் பார்வையாளர்கள் அதேவிதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள் என்பது ஒரு இயக்குநராக என் அசைக்க முடியாத நம்பிக்கை…” என்று பாராட்டித் தள்ளுகிறார் இயக்குநர் சரண்.
error: Content is protected !!