நிவின் பாலி நடித்திருக்கும் ‘ரிச்சி’ டிசம்பர் 8-ம் தேதி வெளியாகிறது

நிவின் பாலி நடித்திருக்கும் ‘ரிச்சி’ டிசம்பர் 8-ம் தேதி வெளியாகிறது

‘பிரேமம்’ பட ஹீரோவான நிவின் பாலி, தற்போது ‘ரிச்சி’ என்ற நேரடி தமிழ் படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  

இவருக்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ்ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இசை – அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு – பாண்டி குமார், எழுத்து, இயக்கம் – கவுதம் ராமச்சந்திரன், 

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர், சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 8-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது என்று   இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

‘பிரேமம்’ மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் நிவின் பாலிக்காக பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் ‘ரிச்சி’ படத்தின் விநியோக உரிமையை, ‘விக்ரம் வேதா’,  ‘அவள்’,  ‘அறம்’  என்று தொடர்ந்து வெற்றி படங்களை விநியோகித்திருக்கும்  ‘Trident ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் விநியோகஸ்தரான ரவீந்திரன் பெற்றிருக்கிறார் என்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. 

‘ரிச்சி’ படத்தை வெளியிடுவது பற்றிப் பேசிய விநியோகஸ்தர் ரவீந்திரன், “தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை.  நான் வெளியிட்ட முந்தைய  படங்களை போலவே இந்த ‘ரிச்சி’ படமும் வெற்றி பெறும் என்று உறுதியாய் நம்புகிறேன். நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்..” என்று பெருமையுடன் கூறினார்.