நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள்..!

நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள்..!

நடிகை ராதிகாவின் மகளான ரேயானுக்கும், பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் மிதுனுக்கும் நாளை காலை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி கடந்த 4 நாட்களாக திருமணச் சடங்குகள் சென்னையில் பல்வேறு ஹோட்டல்களில் நடைபெற்று வருகின்றன.

சங்கீத் பெஸ்டிவல் என்ற பெயரில் நடத்தப்படும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமான நிகழ்ச்சி நேற்று இரவு நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்த கண்கவர் நிகழ்ச்சியில் மதுபாலா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ், சுந்தர்.சி, குஷ்பு, ஜெயம் ரவி, காஜல் அகர்வால், த்ரிஷா, சிம்பு, சமந்தா, மஞ்சு, திவ்யதர்ஷிணி, விச்சு விஸ்வநாத், மேஜர் கெளதம், நிஷா, சுஹாசினி, கணேஷ் வெங்கட்ராம், ஷோபனா, ஜனனி ஐயர், நமீதா, பல்லவராஜன், உமா பத்மநாபன், நிரோஷா, ராம்கி, சமுத்திரக்கனி, லிசி, கனிகா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் அம்பரீஷ், சுமலதா, சினேகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், லதா ரஜினிகாந்த், கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் திரையுலகப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
error: Content is protected !!