‘மெட்ரோ’ ஷிரிஷ், பூஜா தேவாரியா நடிக்கும்  ‘ராஜா ரங்குஸ்கி’

‘மெட்ரோ’ ஷிரிஷ், பூஜா தேவாரியா நடிக்கும்  ‘ராஜா ரங்குஸ்கி’

‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணிதரன் அடுத்து இயக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

இந்தப் படத்தில் ‘மெட்ரோ’ படத்தின் ஹீரோவா ஷிரிஷ் நடிக்கிறார். நாயகியாக ‘இறைவி’ பூஜா தேவாரியா நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

திகில், மர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படம் சமீபத்தில் பூஜை நிகழ்வுடன் துவங்கியது. இந்தப் படத்தின் தலைப்பை, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பளித்தார்.

“எங்கள் படத்தின் கதாநாயகன் பெயர் ‘ராஜா’, கதாநாயகி பெயர் ‘ரங்குஸ்கி’. இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் ஒன்றாக இணைத்து  உருவாக்கப்பட்டதுதான் ‘ராஜா ரங்குஸ்கி’. கதாநாயகி ஒரு எழுத்தாளர். அந்த வேடத்திற்கு ஏற்றார் போல் ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று எண்ணியபோது, எங்கள் அனைவரின் கவனத்திலும் உதயமானது, எழுத்தாளர் சுஜாதா அவர்களின் செல்லப் பெயரான ‘ரங்குஸ்கி’தான்.  

தலை சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜாவோடு இணைந்து பணியாற்றுவது என்பது  எல்லா இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை தருவது மட்டுமின்றி, கதைக் களத்திற்கும் புத்துயிர் அளிக்கும்.

திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ‘ராஜா ரங்குஸ்கி’ படத்திற்கு வழங்கியிருக்கும்  ‘வாசன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரும், என்னுடைய தயாரிப்பாளருமான சக்திவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் முழுவதையும் பூர்த்தி செய்யக்கூடிய எல்லா சிறப்பம்சங்களும், எங்களின் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் நிறைவாக அமைந்திருக்கிறது…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் தரணிதரன்.




error: Content is protected !!