“இந்த லட்சணத்தில் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்..?” – நடிகை ஜோதிகாவின் கேள்வி..!?

“இந்த லட்சணத்தில் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்..?” – நடிகை ஜோதிகாவின் கேள்வி..!?

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில், அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’.

இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் ஹரீஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், இசை – சீன் ரோல்டன், பாடல்கள் – யுகபாரதி, தனிக்கொடி, முத்தமிழ், சீன் ரோல்டன், சை.கெளதம்ராஜ், வசனம் – சை.கெளதம்ராஜ், பாரதி தம்பி, படத் தொகுப்பு – பிலோமி ராஜ், கலை இயக்கம் – குமார் கெங்கப்பன், சண்டை இயக்கம் – சுதீஷ், பாண்டியன், நடன இயக்கம் – சாண்டி, புகைப்படங்கள் – லஷ்மண், கிராபிக்ஸ் – நாக் ஸ்டூடியோஸ், உடை வடிவமைப்பு – செல்வம், பூர்ணிமா ராமசாமி, ஒப்பனை – முருகன், ஒலி வடிமைப்பு – உதயகுமார், தயாரிப்பு மேலாண்மை – சிராஜூதின், ராஜாராம், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், நிர்வாகத் தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பு – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பு நிறுவனம் – டிரீம் வாரியர் பிக்சர்ஸ், எழுத்து, இயக்கம் – சை.கெளதம்ராஜ்.

raatchsasi-movie-poster-1

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பகல் 12 மணிக்கு தி.நகர் ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாயகி ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் கவிதா பாரதி, ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், இசையமைப்பாளர் சீன் ரோல்டன், பாடலாசிரியர் முத்தமிழ், வசனகர்த்தா பாரதி தம்பி, கலை இயக்குநர் குமார் கெங்கப்பன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் சை.கெளதம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பேசும்போது, “ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. அவர்கள் சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து படம் செய்து கொண்டிருந்தார்கள்.

IMG_9551

நானாகத்தான் போய் வாய்ப்பு கேட்டேன். அவர்களும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டார்கள்.

இப்போதெல்லாம் புதிய இயக்குநர்கள் கதைச் சொல்லும் போது, ஒரு தெளிவான மனநிலையுடன் படம் மூலமாக சமூகத்துக்கு என்ன கருத்துச் சொல்லப் போகிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள். நடிகர்களின் மார்க்கெட், வியாபாரம் பற்றி யோசிக்காமல் கதைக்கு உண்மையாக இருக்கிறார்கள்.

இந்த மன நிலையில்தான் இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் என்னிடம் இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். ஒரு அரசாங்க பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்ற மெசேஜை சொல்லி ஏற்கனவே சில படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும், இந்தக் கதை எனக்குப் புதிதாக இருந்தது.

இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள்கூட அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவராக இருக்கிறார் என்று தெரியவில்லை.

IMG_9589

தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது.

இந்தப் படத்தில் எனது புதிய நடிப்பை நீங்கள் பார்க்கலாம். “நீங்கள் நடிக்கலாம், ஆனால் அதில் ‘கீதாராணி டீச்சர்’தான் இருக்க வேண்டும்…” என்று அடிக்கடி சொல்வார் இயக்குநர். “காட்சிகளில் எனது கோபம் தெரிய வேண்டும்” என்பார். பாரதி தம்பி சார் வசனம் எழுதியிருக்கார். அவருக்கு நான் ஒரு வட இந்தியப் பெண் என்ற யோசனை வரவில்லை என நினைக்கிறேன். அவ்வளவு கடினமாக வசனங்கள் இருந்தது.  இந்தப் படத்தின் முகமாக இருந்ததில் மகிழ்ச்சி.

ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியாக காண்பிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் பணிபுரியும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவரது உழைப்பு அபாரமாக இருந்தது.

படம் மீது அவர்களுக்கு இருந்த காதல் அற்புதமானது.   மதிய உணவு இடைவேளைகூட இல்லாமல் படப்பிடிப்பு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எனக்கு இடைவேளை உண்டு. இந்த மாதிரியான ஒரு பெரிய உழைப்பு, எந்தவொரு பெரிய படத்திலும் பார்த்ததில்லை.

IMG_9424

இந்தப் படத்தின் நாயகன் ஷான் ரோல்டன்தான். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பாடல்கள் கேட்டேன். கேட்டவுடனே பிடித்திருந்தது. அவர் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். படத்தின் படத் தொகுப்பே புதுமையாக இருந்தது.

ட்விட்டரில் சிலர் என்னைக் குறிப்பிட்டு ‘பெண் சமுத்திரக்கனி’ என்றும் இத்திரைப்படம் ‘சாட்டை’ மாதிரியான படம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்தப் படத்தில் அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், இந்தப் படம் அப்படியில்லை.

100 படங்கள் இதே போன்று வந்தாலும்கூட, இது தேவைதான். சமூகத்துக்கு தேவைதான். பெரிய பட்ஜெட் படங்களில்கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப் பற்றி பேச யாருமே இங்கே தயாராக இல்லை.

நாயகன் வருவார், 2-3 நாயகிகளை காதலிப்பார், இடைவேளை, எமோஷன், க்ளைமாக்ஸ் என இருக்கும். இது மாதிரி படங்களில் நானும் நடித்திருக்கிறேன். அதைப் பற்றி யாருமே பேசுவதே இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படத்தை மட்டும் ‘பள்ளிக்கூடம்’, ‘சாட்டை’ மாதிரி இருக்கிறது என சொல்வது ஏன் என தெரியவில்லை.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க பள்ளியில் படித்தவர்கள்தான். அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள். அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும்போது, அவர்களது வகுப்பறைக்கு சில மாதங்களுக்கு, ஒரு வருடத்திற்கு ஆசிரியர்களே வரவில்லையாம். ஆசிரியர்களே இல்லாமல்தான் பள்ளியை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும்..? இந்த அரசுப் பள்ளி மாணவர்கள் நகர்ப்புறத்தில் இருக்கும் தனியார் பள்ளி மாணவர்களுடன் எப்படி நீட் தேர்வில் போட்டியிட முடியும்..? ஆகவே, இதே மாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால்கூட நாம் உட்கார்ந்து பார்க்கலாம்.

IMG_9546

இந்தப் படத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் மேடம்தான் படப்பிடிப்பின்போது எனக்கிருந்த ஒரே துணை. ஒரு எமோஷன் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அவர் ஒரு அற்புதமான நடிகை.

இதர நாயகிகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை. சக பெண்ணோடு ஒரு காட்சியில் நடித்தால், அதன் அனுபவமே புதுமையாக இருக்கும். இப்படத்தில் என்னோடு நடித்த டீச்சர்கள் அனைவருக்குமே நன்றி. அவர்கள் ரொம்ப எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடு கொடுத்து நடிப்பதே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

5 ஆண்டுகளுக்கு முன்பு என் பெண்ணுடைய பள்ளி ஆண்டு விழாவில் டீச்சர் ஒருவர் பேசியதை இங்கு கூறலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதனை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன்.

1N6A9376

“மலையில் உயரமான இடத்துக்கு ஏறிவிட்டு, கீழே நிற்பவர்களை பார்ப்பதற்கு பெயர் வெற்றி என இருக்கலாம். அது வாழ்க்கையில் ஒரு சாதனை கிடையாது. எது முக்கியம் என்றால், மலை ஏறும்போது கிடைத்த அனுபவம்தான் அழகாக இருக்க வேண்டும். சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்.”

இந்த வார்த்தைகளை என் 2-வது திரையுலக பாதையில் ஏறும்போது, எனக்கு ரொம்பவே அழகான கதைகள் வருகிறது. நான் அதிலிருந்து சிறந்ததை தேர்வு செய்கிறேன்.

அதுக்கு மேல் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற ஆண்களை அதிகமாக இந்தப் பயணத்தில்தான் சந்தித்திருக்கிறேன். அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போதுதான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. அதுவே என் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையாக நினைக்கிறேன்…” என்றார் ஜோதிகா.




error: Content is protected !!