சசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..!

சசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..!

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஜ வம்சம்.’

இந்தப் படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ‘ராஜ வம்சம்’ திரைப்படம் சசிகுமாரின் 19-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது…!

Rajavamsam

இந்தப் படத்தில் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா, சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என்று குறிப்பிடத்தக்க 49 கலைஞர்கள் இந்தக் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

IMG_4497

ஒளிப்பதிவு – சித்தார்த், இசை – சாம்.சிஎஸ்., கலை இயக்கம் – சுரேஷ், படத் தொகுப்பு – சபு  ஜோசப், நிர்வாகத் தயாரிப்பு – N.சிவக்குமார், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன் பரமசிவம்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கதிர்வேலு இயக்கியுள்ளார். மிக அதிகப்படியான நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் சுந்தர்.C அவரிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றவர்தான் இந்தப் படத்தின் இயக்குநரான கதிர்வேலு.

IMG_4298

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநர், தனது முதல் படத்திலேயே 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

இந்த ‘ராஜ வம்சம்’ திரைப்படம் 2020-ம் ஆண்டில் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.




error: Content is protected !!