full screen background image

கிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்

கிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்

10 திரைகள் கொண்ட புதிய மல்டிபிளக்ஸ் அறிமுகத்துடன் சென்னையில் தன் கால் தடத்தை அழுத்தமாக பதிக்கும் PVR Cinemas.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பி.வி.ஆர் சினிமாஸ் உத்தண்டியில் உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்த புதிய மல்டிபிளக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக PVR PlayHouse என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த மல்டிபிளக்ஸ். இந்த மல்டிபிளக்ஸ் உடன் சேர்த்து தமிழ்நாட்டில் 13 இடங்களில் 83 திரைகளும், தென்னிந்தியாவில் 43 இடங்களில் 268 திரைகளும் கொண்டு பி.வி.ஆர் முதன்மையாக விளங்குகிறது. அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த மல்டிபிளக்ஸ் 51,682 சதுர அடி பரப்பளவில் 1400 பார்வையாளர்களை அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், BARCO 2K ப்ரொஜக்‌ஷன் சிஸ்டம், டால்பி 7.1 சரவுண்ட் சவுண்ட் மற்றும் அடுத்த தலைமுறை 3D டெக்னாலஜி ஆகியவற்றை நிறுவியிருப்பதன் மூலம் சிறப்பான காட்சிகள் மற்றும் சக்தி வாய்ந்த ஒலி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த மல்டிபிளக்ஸ் குறித்து PVR லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் திரு.சஞ்சீவ்குமார் கூறும்போது, “இந்த புதிய மல்டிபிளக்ஸ், பி.வி.ஆரின் தனித்துவமான சேவையை நிறைய இடங்களுக்கு எடுத்து செல்லும் எங்கள் வியாபார நோக்கத்துடன் பொருந்துகிறது. சென்னை எங்களுக்கு ஒரு முக்கியமான பகுதி. சினிமா அனுபவத்திற்கான புதிய தரநிலைகளை அமைப்பதன் மூலம் தென்னிந்திய சந்தையில் எங்கள் உறுதியான இடத்தை நிரூபிக்க எதிர்நோக்கி இருக்கிறோம்” என்றார்.

மேலும், PVR சினிமாவின் தலைமை நிர்வாகி திரு.கௌதம் தத்தா கூறும்போது, “சென்னைவின் அழகிய புறநகர் பகுதியில் எங்களின் புதிய 10 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸை அறிமுகப்படுத்தியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய மல்டிபிளக்ஸ் குழந்தைகளுக்கான வரப்பிரசாதம். பி.வி.ஆர் PlayHouse மூலம் மேம்பட்ட சினிமா அனுபவத்தை வழங்குவதில் மகிழ்கிறோம். சமகால வடிவமைப்புகள் மற்றும் மெய்சிலிர்க்கும் அழகியலால், இந்த மல்டிபிளக்ஸ் இந்த பகுதியில் தரத்தில் உயர்ந்து நிற்கிறது. மேலும் பார்வையாளர்கள் அதை அனுபவிப்பதைப் பார்க்க நாங்கள் உற்சாகமாக உள்ளோம்” என்றார்.

Interlocking Panache என்ற கருத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மல்டிபிளக்ஸ் பிரகாசமான மற்றும் அதிநவீன தோற்றத்தை வழங்குகிறது. கூடுதலாக, விரைவு டிக்கட் வசதி மற்றும் விரும்பத்தக்க உணவு மெனு ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்கள். பி.வி.ஆர் பரிசு அட்டைகள் உபயோகிக்கும் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும், பி.வி.ஆர். உறுப்பினராக இணைந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மல்டிபிளக்ஸ் உடன், தற்போது பி.வி.ஆர் 67 நகரங்களில் 166 இடங்களில் 781 திரைகளை கொண்டு இயங்கி வருகிறது.

PVR Cinemas பற்றி:
பி.வி.ஆர் சினிமாஸ் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு நிறுவனம், 1997ல் துவங்கப்பட்டதில் இருந்து தங்களின் தனித்துவமான அம்சங்களால் தங்கள் பிராண்டை மறுவரையறை செய்வதோடு, பார்வையாளர்களுக்கும் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்தியாவில் 67 நகரங்களில் (21 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள்) 166 இடங்களில் 781 திரைகளை கொண்டு, ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கி வருகிறது. இதில் பல வகையான திரைகளையும் கொண்டுள்ளது. Director’s Cut 4 திரைகள், Gold 33 திரைகள், IMAX 8 திரைகள், 4DX 15 திரைகள், P[XL] 7 திரைகள், Playhouse 9 திரைகள் மற்றும் PVR Onyx ஒரு திரையையும் கொண்டுள்ளது.

Our Score