வித்தியாசமான காதல் கதையில் வரவிருக்கும் ‘புறா பறக்குது’ திரைப்படம்

வித்தியாசமான காதல் கதையில் வரவிருக்கும் ‘புறா பறக்குது’ திரைப்படம்

மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த ‘டாக்சி  4777’ படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத் தொகுப்பு – ரமேஷ் மணி, பாடல்கள் – பிரியன், நடனம் – தினேஷ், சோபி, சண்டை பயிற்சி – T. தியாகராஜன், கலை – தோட்டாதரணி, ஒலிப்பதிவு – லட்சுமி நாராயணன், மக்கள் தொடர்பு – செல்வரகு, தயாரிப்பு  மேற்பார்வை – முருகபூபதி.

காதல் என்பது அமுதசுரபி மாதிரி. அதனால்தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன.. அந்த வகையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்துள்ளார் இலட்சுமி காந்தன்.

முதல் காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள்தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில்தான் அவளிடம் ‘ஐ லவ் யூ’ சொல்கிறான். இதுதான் படத்தின் கதை.

இந்தக் காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான் திரைக்கதையில் வித்தியாசப்படுத்தி காட்டுகிறாராம் இயக்குநர் இலட்சுமி காந்தன். 

இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆர்யா, ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், V.J.முரளி  என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில்  நடிக்கிறார்கள்.. அது எதற்காக என்பது சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.




error: Content is protected !!