வருண்-சம்யுக்தா ஹெக்டே நடிக்கும் ‘பப்பி’ திரைப்படம்

வருண்-சம்யுக்தா ஹெக்டே நடிக்கும் ‘பப்பி’ திரைப்படம்

‘போகன்’, ‘நெருப்புடா’, மற்றும் ‘நைட் ஷோ’ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவத்துடன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுக்கவிருக்கும் வருண், சினிமாவுக்கு தேவையான, நாயகனாக புகழ் பெற அவசியமான அத்தனை கலைகளையும் நன்கு கற்றிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் இணை இயக்குநரான நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வருண்.

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டே இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ஒரு நாய், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

varun-2

சம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர். பல்வேறு கதைகளை கேட்ட சம்யுக்தா, இறுதியாக ‘பப்பி’ என்ற இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார்.

இயக்குநர் நட்டுதேவ் ‘காக்கா முட்டை’ இணை இயக்குநர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் ஹீரோ பிரவேசம் பற்றி வருண் பேசுகையில், ‘’எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். ‘பப்பி’ கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது.

ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.

 
error: Content is protected !!