மிஷ்கினின்  ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது 

மிஷ்கினின்  ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது 

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் ‘சைக்கோ’ திரைப்படம், இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகிவிட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம்புலி ஆகிய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவினை பி.சி.ஸ்ரீராம் செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசைப் பணியை மேற்கொண்டிருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் மிஷ்கின்.

இந்தப் படத்தின் ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க் கூச்செரியும், திரில்லிங் அனுவபத்தின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றுள்ளது. இந்த டீஸரே இந்தப் படத்தை உன்னதமான படைப்பு என்னும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் பெற்று வருகிறது.

பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார்கள்.

படக் குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக இந்த ‘சைக்கோ’ திரைப்படம் வரும் டிசம்பர்-27-ம் தேதியன்று  வெளியாகும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இது பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசும்போது, “எங்களது Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சிறந்த படங்களை தயாரித்து வருகின்றோம்.

ஆனாலும் அவை எல்லாவற்றையும்விட இந்த ‘சைக்கோ’ திரைப்படம் ஆரம்பம் முதலே என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பங்கு கொண்ட ஒவ்வொருவருக்குமே இப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது.

இயக்குநர் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும், மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது.

இப்படத்தில் பணி புரிந்தது என் வாழ் நாளின் மிகச் சிறந்த அனுபவத்தை தந்தது. நிறைய கற்றுக் கொள்ளும் தருணங்கள் படம் முழுக்க நிறைந்திருந்தது. படத்தில் பணி புரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் பல கலவையான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச் சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த டீஸர். மிஷ்கினின் இயக்கம் இந்த டீஸருக்கு பெரிய பலமாக இருந்தது. படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை இன்னும் மிரட்டக் கூடிதயதாக இருக்கும்.

ஒரு மிகச் சிறந்த திரைப்படம்… தற்காலத்தில் மிகச் சரியான காலத்தில் வெளியிடப்பட வேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்த பின்புதான் டிசம்பர் 27-ம் தேதிதான் மிகச் சரியான தேதி என முடிவு செய்தோம். தற்போது படத்தின் வெளியீட்டு வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது…” என்றார்.




error: Content is protected !!