‘பிசாசு’ பிரயகாவுடன் ஜோடி சேர்கிறார் விஷ்ணு..!

‘பிசாசு’ பிரயகாவுடன் ஜோடி சேர்கிறார் விஷ்ணு..!

R.Kannan’s Masala Pix நிறுவனத்தின் சார்பில் விஜய்ராஜ் ஜோதி தயாரிக்கும் புதிய படம் ‘போடா ஆண்டவனே என் பக்கம்..!’

இதில் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ‘பிசாசு’ படத்தில் பிசாசாக நடித்த பிரயகா நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆர்.கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கும் அடுத்தப் படம் இதுதான்.

படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்க உள்ளது. சென்னையில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். பாடல் காட்சிகள் கனடாவில் 10 நாட்கள் படமாக்க உள்ளது. இந்தப் படத்திற்காக அண்ணா சாலை, ரிச்சி தெருவைப் போன்று பிரம்மாண்டமான செட் வடிவமைக்கப்படுகிறது. காதல், நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் கலந்த படமாக திரைக்கதை அமைக்கபட்டுள்ளது. படம், 2015 செப்டம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - .R.கண்ணன்

தயாரிப்பு - விஜய்ராஜ் ஜோதி

தயாரிப்பு மேற்பார்வை - ஹர்ஷா

கேமரா மேன் – P.G முத்தையா

சண்டை பயிற்சி - ஸ்டண்ட் சில்வா

நடனம் - பிருந்தா, கல்யான்

கலை - லால்குடி இளையராஜா

எடிட்டர் - செல்வா

மக்கள் தொடர்பு - ஜான்சன்