பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்..!

பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்..!

தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபு தேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலையில் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ சி முகில்.

“பிரபு தேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.  இந்த படம் பிரபு தேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபு தேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலையில் சென்னையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் பிரபு தேவா, முகேஷ் திவாரி கலந்து கொள்ளும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.