பிரபாஸின் ‘சாஹோ’ – ஆகஸ்ட்15 வெளியீடு

பிரபாஸின் ‘சாஹோ’ – ஆகஸ்ட்15 வெளியீடு

ரெபல் ஸ்டார் பிரபாஸ், எது முடியும், எது முடியாது என்ற பாரம்பரியமான சினிமா நம்பிக்கைகளை உடைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராகத் திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்குப் பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளைப் புரிந்தது பாகுபலி.

பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான “சாஹோ”வுக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு முடிந்து விட்டது. பிரபாஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சரித்திரச் சாதனை படைத்த பாகுபலி படத்துக்குப் பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையைப் பற்றிய ஒரு துணுக்கு கூட வெளியாகாமலேயே இத்தகைய இமாலய எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை.

‘ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ பாகம் 1 மற்றும் பாகம் 2 மேக்கிங் வீடியோக்கள் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாட்களில் முறையே வெளியிடப்பட்டது. ஒரு புதிய பிரபாஸைக் காட்டியிருக்கும் அந்த வீடியோக்கள் இது ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பதை பறை சாற்றுகிறது. இருந்தாலும் படத்தின் ஒருவரி கதை புதிராகவே உள்ளது.

யு.வி. கிரியேஷன்ஸ் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த சாஹோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஷ்ரத்தா கபூர். ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், சுங்கீ பாண்டே மற்றும் ஈவ்லின் ஷர்மா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.




error: Content is protected !!