‘பொட்டு’ படம் தெலுங்கு விநியோக உரிமை 1 கோடிக்கு விற்பனையானதாம்..!

‘பொட்டு’ படம் தெலுங்கு விநியோக உரிமை 1 கோடிக்கு விற்பனையானதாம்..!

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பொட்டு.’ 

இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் தம்பி ராமய்யா, பரணி,  நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,  நிகேஷ் ராம்,  ஷாயாஜி ஷிண்டே,  மன்சூரலிகான்,  ஆர்யன், சாமிநாதன்,  பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வசனம் – செந்தில், ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை – அம்ரீஷ், பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – எலீசா, கலை – நித்யானந், நடனம் – ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர், தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், எழுத்து, இயக்கம் – வி.சி.வடிவுடையான்.  

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை. ஆனால் இந்த ‘பொட்டு’ திரைப்படம் தமிழில் வெளியாவதற்கு முன்பாகவே தெலுங்கில் அமோகமாக விற்பனையாகி விட்டதாம்.

“மனிதர்கள் செய்யும் சாகசங்களைவிட பேய்கள் செய்யும் சாகசங்கள் மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. அதனால் ‘பொட்டு’ படத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதால்  தெலுங்கு மொழியில் இந்தப் படத்தை வெளியிட NkR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ‘பொட்டு’ படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். “தெலுங்கில் இப்படம் சென்சார் ஆன உடனேயே எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
error: Content is protected !!