‘பொட்டு’ படத்திற்கு U / A சான்றிதழ்

‘பொட்டு’ படத்திற்கு U / A சான்றிதழ்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொட்டு’.

இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் தம்பி ராமைய்யா, பரணி,  நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,  ஷாயாஜி ஷிண்டே,  மன்சூரலிகான்,  ஆர்யன்,  சாமிநாதன்,  பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை – அம்ரீஷ், பாடல்கள் – விவேகா, கருணாகரன், சொற்கோ, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – எலீசா, கலை –நித்யானந், நடனம் – ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை  – ஜி.சங்கர், தயாரிப்பு  -ஜான் மேக்ஸ், ஜோன்ஸ், எழுத்து, இயக்கம் – வி.சி.வடிவுடையான்.             

படம் பற்றி இயக்குநர் வடிவுடையான் பேசும்போது, “இது பக்கவான திரில்லர் படமாக இருக்கும். மொத்தம் 90 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பரத் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். நமீதா இதுவரை நடிக்காத  வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.

தமிழில்  ‘பொட்டு’ என்றும், தெலுங்கில்  ‘பொட்டூ’ என்றும், ஹிந்தியில்  ‘பிந்தி’ என்றும் மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஏக்நாத் எழுதி அம்ரீஷ் இசையில் உருவான ‘அடி போடி சண்டாளி’ பாடல் காட்சியை கேரளாவில் உள்ள அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் பரத் – சிருஷ்டி டாங்கே பங்கேற்க படமாக்கினோம். அந்த பாடல் தற்போது பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு சென்சாரில் ‘U/ A’ சான்றிதழ் பெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் வடிவுடையான்.