full screen background image

எனக்கு போஸ்டர் அடிக்கலை-அதுனால வரலை-பிரஸ்மீட்டை புறக்கணித்த காமெடி நடிகர்..!

எனக்கு போஸ்டர் அடிக்கலை-அதுனால வரலை-பிரஸ்மீட்டை புறக்கணித்த காமெடி நடிகர்..!

டைட்டிலில் பெயர் வரவில்லையென்று கோபித்துக் கொண்டால்கூட அது நியாயமானது.. ஆனால் ‘போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தை போடவில்லை. அதுனால நான் பிரஸ்மீட்டுக்கு வர முடியாது…’ என்று சொல்வது நியாயமானதா..? அதிலும் ஒரு காமெடி நடிகர் இப்படி சொன்னாரென்றால், தமிழ்ச் சினிமாவின் கதியை நினைச்சுப் பாருங்க..!

‘பப்பாளி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் கோவிந்தமூர்த்தி என்ற இயக்குநர். இவர் ஏற்கெனவே ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் மிக முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார் அந்த காமெடி நடிகர்.

நேற்றைக்கு இந்தப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி பிரசாத் கலர் லேப்பில் இருக்கும் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. இந்த விழாவுக்கு வரும்படி அந்த காமெடி நடிகருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குநர். “என் முகத்தை ஏன் போஸ்டரில் போடவில்லை..?” என்று கேட்டிருக்கிறார் அந்த காமெடி நடிகர். இயக்குநர் ஏதோ சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால் அதில் திருப்தியடையாத அந்த காமெடி, “நான் பிரஸ் மீட்டுக்கு வர மாட்டே்ன்..” என்று சொல்லிவி்ட்டாராம்.

DSC_4928

இதை மேடையில் மிகுந்த டென்ஷனோடும், வேதனையோடும் சொன்னார் இயக்குநர். காமெடி நடிகர் சொன்ன வார்த்தைகளே அதே கோபத்தோடும் பேசி காண்பித்தார்.. ஆனால் நாகரிகமாக அந்த நடிகரின் பெயரை இயக்குநர் மேடையில் சொல்லவில்லை. “ஹீரோயின்கூட வரலை.. அதுக்காகவும் நான் வருத்தப்படலை.. அம்மா கேரக்டர்ல நடிச்ச சரண்யா பொன்வண்ணன் வந்திருக்காங்க.. அது போதும் எனக்கு..” என்று தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார் இயக்குநர்..!

இன்னொரு பக்கம் பார்த்தால் அந்த காமெடி நடிகர் கேட்டதற்கு வேறொரு காரணமும் இருக்கிறதுபோலும்..! இநத விழாவின்போது வைக்கப்பட்டிருந்த பல போஸ்டர்களில் ஹீரோ, ஹீரோயின், இவர்களுடன் அப்பா கேரக்டரில் நடித்த இளவரசு, அம்மா கேரக்டரில் நடித்த சரண்யா பொன்வண்ணன் போன்றவர்களுக்கும் தனி போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.

‘இளவரசுக்கு போஸ்டர் அடித்திருக்கும்போது, எனக்கும் ஒண்ணு வைச்சிருக்கக் கூடாதா?’ என்று அந்த காமெடி நடிகர் நினைத்திருக்கலாம் அல்லவா..! போஸ்டரில் முகம் காட்டியிருந்த நடிகர் இளவரசு, இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.  ஒருவேளை இந்த காமெடி நடிகருக்கும் போஸ்டர் அடித்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பாரோ என்னவோ..?!

ஆனால் அவர், இதனை இந்த விழாவுக்கு வந்து மீடியாக்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு பின்பு மேடையிலேயே கேட்டிருக்கலாம்.. நிச்சயம் நியாயமான குரலாக இருந்திருக்கும்..

இது போன்ற மீடியம் பட்ஜெட் படங்களுக்கு பிரஸ் மீட் நிகழ்ச்சியின் காவரேஜ் மிக முக்கியமானது. இதில் நடிக்கும் நடிகர்கள் அதனை திரைத்துறையின் வளர்ச்சிக்காக நினைத்து தங்களுடைய ஈகோவை விட்டுக் கொடுத்து பணியாற்றுவதே அவர்களுக்கும் நல்லது..

இது பற்றி இயக்குநர் இப்படி புலம்பத்தான் முடியும்.. சங்கங்களில் முறையிடவும் முடியாது.. அந்தத் தைரியத்தில்தான் அந்த நடிகர் இப்படி இருக்கிறாரோ என்னவோ..? ஏனெனில் அந்த காமெடி நடிகர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லையாம்.. அப்புறம் இதுக்கு மேல  என்ன செய்யறது..?

Our Score