‘வினோதன்’ படத்திற்காக வினோதமான ஸ்டைலில் எழுதப்பட்ட பாடல்..!

‘வினோதன்’ படத்திற்காக வினோதமான ஸ்டைலில் எழுதப்பட்ட பாடல்..!

பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘வினோதன்’. இந்தப் படத்தில் வருண், வேதிகா, சலோனி ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் முதல் பாடலை நாளை வெளியிடப் போகிறார்கள். இதில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. அது என்னவெனில் அந்தப் பாடல் முழவதுமே ‘பாலின்ட்ரோம்’ ஸ்டைலில் எழுதப்பட்டிருப்பதுதான்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். ‘பாலின்ட்ரோம்’ ஸ்டைல் என்றால் ஒரு வார்த்தையை நீங்கள் படிக்கும்போது அதை அப்படியே திருப்பி கடைசி வரியிலிருந்து படித்தாலும் அதே வார்த்தைதான் வர வேண்டும்.

உதாரணமாக ‘விகடகவி’, ‘தாத்தா’, ‘பாப்பா’, ‘காக்கா’ இந்த மாதிரி வார்த்தைகள்தான் இந்த ‘பாலின்ட்ரோம்’ ஸ்டைல் வார்த்தைகள். இப்படிப்பட்ட கஷ்டமான வார்த்தைகளை நாம் ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து யோசித்தாலும் ஞாபகத்துக்கு வரவே வராது.

இந்த வார்த்தைகளை வைத்துதான் ஒரு பாடல் முழுவதையும் எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இமானின் அமர்க்களமான இசையில் உருவாகியிருக்கும் இந்த பாலின்ட்ரோம் பாடல் நாளை மாலை அதாவது 7.1.17-ம் தேதி சரியாக மாலை 7 மணி 1 நிமிடம் 17-வது வினாடியில் யூ டியூப்பில் உள்ள DooPaaDoo சேனலில் வெளியிடப்படவுள்ளது.

அது ஏன் இந்த நேரம் என்று நீங்கள் யோசித்தால் ஒரு நிமிடம் அந்த தேதியையும், நேரத்தையும் படித்துப் பாருங்கள். பின்பு அதை பின்னால் இருந்து முன்னால் எழுதிப் பாருங்கள். இந்தத் தேதியும், நேரமும் ‘பாலின்ட்ரோம்’ ஸ்டைலில் வரும். இதனால்தான் நாளைய தினம்தான் இந்தப் பாடலை வெளியிடுவது பொருத்தமாக இருக்குமே என்றெண்ணி நாளை வெளியிடுகிறார்கள்.

இது பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கி இங்கே விரிவாகப் பேசியிருக்கிறார் :