நடிகர் அபி சரவணன் ஹீரோவாக நடிக்கும் ‘ப்ளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படம்

நடிகர் அபி சரவணன் ஹீரோவாக நடிக்கும் ‘ப்ளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படம்

VCR Films சார்பில் பி.ராமாராவ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.

படத்துக்கு ‘ப்ளஸ் ஆர் மைனஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் அபி சரவணன் ஹீரோவாகவும், அக்சரா, அக்சிதா, காயத்ரி ஹீரோயின்களாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் அங்காடி தெரு மகேஷ், நிழல்கள் ரவி, ரஞ்சனி மற்றும் பலரும் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – சதீஷ், இசை – ஜெய் கிஷ், கலை இயக்கம் – கெளதம், மதன், வடிவமைப்பு – வி.என்.அகிலன், இயக்கம் ஜெய் யசோத்.

இந்தப் படத்தின் பூஜை இன்று நடந்தேறியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.