‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்..!

‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்..!

கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சி.விஜயன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி  ஐ.எஸ்.ஓ ‘.

இந்தப் படத்தில் ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் ‘காளி’  படத்தின் நாயகியான  ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

மேலும் நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன்,  ஆர்.சுந்தர்ராஜன்,  டெல்லி கணேஷ்   உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்..

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை  இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்  வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.




error: Content is protected !!