உலக அரங்கில் சாதனை படைக்கும் ‘பேரன்பு’ திரைப்படம்..!

உலக அரங்கில் சாதனை படைக்கும் ‘பேரன்பு’ திரைப்படம்..!

‘ஆசியாவின் ஆஸ்கார்’ என்று புகழ் பெற்ற திரைப்பட விழா சீனவில் வருடந்தோறும் நடைபெறும் ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’. 

21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் தேர்வான ஒரே தென்னிந்திய திரைப்படம் தமிழ் படமான ‘பேரன்பு’தான். 

தயாரிப்பாளர் P.L.தேனப்பனின் தயாரிப்பில் இயக்குநர் ராமின் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அமீர் மற்றும் பலர் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த ‘பேரன்பு’ படம் உருவாகியிருக்கிறது. 

7

கடந்த ஜனவரியில் உலக திரைப்பட விழாவில் மிகவும் மதிப்புடைய  47 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நெதர்லாந்தின் ‘ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா’வில் ‘பேரன்பு’-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது.

சிறந்த ஆசிய படத்திற்காக கொடுக்கப்படும் ‘நெட்பாக்’ விருதிற்கு போட்டியிடவும் ‘பேரன்பு’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  மேலும் பார்வையாளர்கள் விருது பிரிவிலும் கலந்து கொண்டது. பார்வையாளர்கள் விருது பிரிவில் போட்டியிட்ட 187 படங்களில் பார்வையாளர்களின் வாக்கிற்கிணங்க ‘பேரன்பு’ 20-வது இடத்தை பிடித்தது. 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியப் படம் ‘பேரன்பு’. 

இப்போது பேரன்பு திரைப்படம் சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற ‘Asian premiere’-ல் முதல் காட்சியாக கடந்த 16-ம் தேதி திரையிடப்பட்டது. 17-ம் தேதி ‘பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்’ என்ற நிகழ்ச்சியின் கீழ் மீண்டும் திரையிடப்பட்டது.

9

‘ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா’வில் பார்வையாளர்கள் எப்படி எழுந்து நின்று கை தட்டினார்களோ, அப்படியே ஷாங்காயில் நடந்து முடிந்த இரண்டு காட்சியிலும் தங்களுடைய ‘பேரன்பை’ பார்வையாளர்கள் தங்களுடைய கை தட்டல் மூலமாகப் பாராட்டினார்கள். 

மெகா ஸ்டார் மம்மூட்டியின் நடிப்பை, ‘உலகத் தரத்திலான நடிப்பு’ என சீன திரைப்பட விமர்சகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். ‘தங்க மீன்களில்’ ‘செல்லம்மா’வாக நடித்த சாதனா, இத்திரைப்படத்தில் ‘பாப்பா’ என்ற கதாப்பாத்திரத்தில் மொத்தப் பார்வையாளர்களையும் தன் வசப்படுத்தினார். 

2

பார்வையாளர் கலந்துரையாடலில் சீன தேசத்து பெண் ஒருவர், தான் ‘தங்க மீன்களின்’ பெரிய ரசிகை என்றும், ‘பேரன்பு’, ‘தங்க மீன்களை’ தாண்டி தனக்குப் பிடித்திருப்பதாகவும் கூறினார்.

“பார்வையாளர்களின் பலத்த பாராட்டைப் பெற்ற ‘பேரன்பு’, இன்று 19-ம் தேதி மாலை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்றாவது முறையாக திரையிடப்படுகிறது. விரைவில் இந்தியாவில் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது..” என்று தயாரிப்பாளர் P.L.தேனப்பன் கூறினார்.