பெண்ணியம் பேச வரும் ‘பென் விலை வெறும் ரூபாய் 999’ திரைப்படம்

பெண்ணியம் பேச வரும் ‘பென் விலை வெறும் ரூபாய் 999’ திரைப்படம்

பொதுவாக பெண்கள் பிரச்சினையை அணுகுவதாகக் கூறும் படங்கள் வணிக நோக்கில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவார்கள். ஆனால் நாட்டில்  பற்றி எரியும் பாலியல்  கொடுமை பற்றியும் தொழில் நுட்ப வளர்ச்சியால் நிகழும்  பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும்  பேசும் ஒரு படம் கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகியுள்ளது. அந்தப் படத்தின் பெயர் ‘பென் விலை வெறும் ரூபாய் 999’. சுருக்கமாக ‘PV999 ‘.

இந்தப் படத்தை  ரெயின்போ புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சங்கர் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநரான வரதராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் அடிப்படையில் ஒரு எடிட்டர். விளம்பரப் படங்கள் மற்றும், ஆவணப் படங்களில் என்று பணியாற்றியவர். ஒளிப்பதிவு சதீஷ்குமார் – மோகன், இசை – ஜூடோ சாண்டி , கலை இயக்கம் – ஜனார்த்தனம், நடன இயக்கம் – அர்ச்சனா, வசந்த் குமார்.   

இதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளை முன்னணி  நடிகர், நடிகையர் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த மாதத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன. இத்திரைப்படம் வரும் நவம்பரில்  திரைக்கு வரவிருக்கிறது.

pen vilai verum rupaai 999 movie

இந்த  ‘பென் விலை வெறும் ரூபாய் 999 மட்டுமே’  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதர் சங்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதற்கு  எதிராக கருத்துகளும் பரவின.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பெண்ணியம் பேசும் வரலட்சுமி தரப்பிலிருந்து வெளிவந்ததால் இது பெண் பாதுகாப்பு சம்பந்தமான படம் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் வரதராஜ் பேசும்போது, “நம் சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால்  பெண்களை ஒருபோகப் பொருளாகவே நமது சமுதாயம் பார்க்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது. அவர்கைளைச் சக மனுஷியாக நினைக்க வேண்டும். மதிக்க வேண்டும். அதன்படியே நடத்த வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது…” என்றார். 

இந்தப் படத்தை ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜெனீஷ் வெளியிடுகிறார்.