யோகி பாபு நடித்திருக்கும் ‘பட்டி புலம்’ திரைப்படம் மார்ச் 22-ம் தேதி வெளியாகிறது

யோகி பாபு நடித்திருக்கும் ‘பட்டி புலம்’ திரைப்படம் மார்ச் 22-ம் தேதி வெளியாகிறது

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் திருமுருகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘பட்டி புலம்.’

இந்தப் படத்தில் யோகி பாபு ‘பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘தற்காப்பு’ என்ற படத்தில் நடித்தவர். மற்றும் சேரன்ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.கே.வர்மா, இசை – வல்லவன், படத் தொகுப்பு – ஆர்.ஜி.ஆனந்த், கலை இயக்கம் – வீரசமர், நடன இயக்கம் – விஜய் ரக்‌ஷித், சண்டை இயக்கம் – மகேஷ், பாடல்கள் – மா.கா.பா.ஆனந்த், வல்லவன் கானா, ராஜேஷ் கானா, வினோத், தயாரிப்பு மேற்பார்வை – அயன்புரம் ராஜு, எழுத்து, இயக்கம் – சுரேஷ். இவர் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தயாரிப்பு – திருமுருகன்.

patty pulam-movie-poster-1

‘பட்டி புலம்’ படம் பற்றி இயக்குநர் சுரேஷ் பேசும்போது, “கிழக்கு கடற்கரை சாலையில் ‘பட்டி புலம்’ என்ற ஊர் உள்ளது. அந்த ஊர்தான் இந்தப் படத்தின் கதைக் களம். அந்த ஊரில் உள்ள சில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் அந்த ஊருக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்.

நான் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி பயன்படுத்தினால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன். அந்த பார்முலாவின்படி நடிகர் யோகி பாபுவை கச்சிதமாக இந்த ‘பட்டி புலம்’ படத்தில் பயன்படுத்தியுள்ளேன். படத்தில் யோகி பாபுவுக்கு ‘பேய்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். யோகி பாபு படத்தில் ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார். படம் வரும் மார்ச் 22-ம் தேதி வெளியாகிறது…” என்றார்.




error: Content is protected !!