ஜே.டி.சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பட்டறை’ திரைப்படம்..!

ஜே.டி.சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பட்டறை’ திரைப்படம்..!

இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் ‘பட்டறை’.

இந்தப் படத்தில் ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கியமான சில கதாபாத்திரங்களில் திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருக்கிறது. 

பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோர் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு.கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.  திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு அல்லாமல் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

j.d.chakravarthy

இயக்குநர் பீட்டர் ஆல்வின், தனது ‘பட்டறை’ படம் பற்றிப் பேசும்போது, “நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம்.

ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. ஆனால், அவர்கள் தங்களது கனவுகளை  நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அப்படியிருந்தும் அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக  மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை இந்தப் ‘பட்டறை’ திரைப்படம் சொல்லும்.

கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பதுதான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி.சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…” என்றார். 
error: Content is protected !!