full screen background image

இயக்குநர் அருண் வைத்தியநாதனின் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கிறார்..!

இயக்குநர் அருண் வைத்தியநாதனின் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கிறார்..!

‘Passion Studios’  நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர்  பிரபுதேவா ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் அருண் வைத்தியநாதன், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ‘Passion Studios’.

இந்த நிறுவனம் கடைசியாக அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘நிபுணன்’ என்ற படத்தை தயாரித்து வழங்கியிருந்தது. இப்போது இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக புதிய திரைப்படத்திற்கு துவக்கியுள்ளனர்.

இந்தப் புதிய படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஆகாஷ் சாம் இயக்கவுள்ளார்.

ஒளிப்பதிவு – விஷ்ணு ராமகிருஷ்ணன், படத் தொகுப்பு – சதிஷ் சத்யா, கலை இயக்கம் – ஆறுசாமி, மேக்கப் – டோரத்தி ஜெய், ஸ்டில்ஸ் – ஆர்.மனோ, மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ் ஷ்ரிதர், இணை தயாரிப்பு – பிரதீப் சுப்ரமணியன், இயக்கம் – ஆகாஷ் சாம்.

இந்தப் புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நாயகன் பிரபுதேவா, அவரது தந்தையும், பழம்பெரும் நடன இயக்குநருமான சுந்தரம் மாஸ்டர், பிரபுதேவாவின் அம்மா, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், இயக்குநர் அருண் வைத்தியநாதன், தயாரி்ப்பாளர்கள், மற்றும் அறிமுக இயக்குநரான ஆகாஷ் சாம் மற்றும் படத்தில் பங்கு பெறும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

Our Score