ஆதி-ஹன்சிகா-பாலக் லல்வாணி இணைந்து நடிக்கும் ‘பார்ட்னர்’ திரைப்படம்

ஆதி-ஹன்சிகா-பாலக் லல்வாணி இணைந்து நடிக்கும் ‘பார்ட்னர்’ திரைப்படம்

RFC கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.P.கோலி தயாரிக்கும் புதிய படம் ‘பார்ட்னர்.’ 

இந்தப் படத்தில் நடிகர் ஆதி நாயகனாகவும், நடிகை ஹன்சிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.

‘ஈரம்’, ‘அரவான்’, ‘யூ-டர்ன்’ ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் நடிகர் ஆதி.

actor aadhi

இதேபோல் தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் நடிகையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட  நடிகை ஹன்சிகாவும் இணையும் இந்த ‘பார்ட்னர்’ படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஆதிக்கு ஜோடியாக  பாலக் லல்வாணி  நடிக்கிறார். இவர் தற்போது ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், வி.டி.வி.கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதி – சபீர் அஹமது, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் – சசி, மக்கள் தொடர்பு – யுவராஜ்.

‘டோரா’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

7H7A0272

‘பார்ட்னர்’ படம் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் பேசும்போது,  “இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது.

படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்கு பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் ‘பார்ட்னர்’ திரைப்படம் நிச்சயமாக பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்” என்றார்.

இந்த ‘பார்ட்னர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று காலை பூஜை நிகழ்வோடு துவங்கியது.