பார்த்திபன் நடித்து, இயக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’

பார்த்திபன் நடித்து, இயக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கிரவுட் பண்டிங் எனப்படும் நிதி திரட்டல் முனைப்பில் உருவான ஒரு திரைப்படத்தை துவக்கியிருக்கிறார். மேலும் தான் நடிக்கவுள்ள சில படங்கள் பற்றியும் இன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அது இங்கே :

“கோடிட்ட இடங்களை நிரப்புக’ – இன்று உங்கள் வாழ்த்துக்களோடு துவங்கும் இளமை ததும்பும்  படம் மட்டுமல்ல; பெருமை பொங்கும் படம். Crowd funding முறையில் தயாராகும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன்… இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே.

IMG_2557

நண்பர் சுசீந்திரனின் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் ‘மாவீரன் கிட்டு’ என்ற படம்.. 2 MB நிறுவனத்தின் தயாரிப்பில், புதிய இயக்குநரான சுதர்சனின் இயக்கத்தில் ‘கயல்’ சந்திரனுடன் நடிக்கும் இன்னொரு படம் என்று மூன்று படங்கள் இன்றைய தினத்தில் – நாளைய தரத்தில் உருவாகிறது..!

இன்னும் ஒன்று தேனாண்டாள் பிலிம்ஸ் படம். இது வரும் அக்டோபரில் துவங்கவுள்ளது.  இன்னும் சில படங்களின் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன. இதைவிடவும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எனக்காக  ஒரு  கதை சொல்ல… கேட்டவுடன் நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொண்டுள்ளேன். அதுவும் விரைவில் துவங்கும் . So… குறையொன்றுமில்லை. இருந்தால் மறைக்காத மறைமூர்த்தி நானே..!

‘REEL estate company llp’ என்ற  crowd proud funding என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனம் துவங்க பணத் தேவை முக்கிய காரணமில்லை. Facebook நண்பர்களுக்கான சந்திப்பில் நண்பர் விஜயகுமார், “10 லட்சம்தான் என்னால் முதலீடு செய்ய முடியும். என்னை போன்றவர்களை இணைத்து நீங்கள் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும்..” என வேண்டியதோடு அதற்குரிய காசோலையை கிழித்து கையில் திணித்துவிட்டும் போனார். இதையறிந்த இன்னும் சிலர் தானாக முன் வந்து இணைந்தார்கள்.  அப்படி துலங்குகிறது இந்தப் படம்.

மிக சிறிய முதலீட்டிற்கு அதீத லாபமும் வரலாம்; சொற்ப நஷ்டமும் வரலாம் என்பது கணக்கு. ஆனால் என் கணக்கு நம்பியவர்களுக்கு நயா பைசாவாவது லாபமாக கொடுத்து நம்பிக்கையை காப்பாற்றி இந்த சிறு குறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதின் மூலம் பிற்காலத்தில் பெரிய பட்ஜட் படங்கள் செய்யலாம் என்பதுதான்.

களவு போய்க் கொண்டிருக்கும் திரைத்துறைக்கு புத்துனரச்சி தரும் விதமாக புதிய தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்யும், இவ்வகையான தயாரிப்பை என்னைப் போன்ற பணத்திற்கு அப்பார்பட்டவர்கள் மட்டுமே  நேர்மையாக செய்ய முடியும்.

படத்தைத் துவங்கிவிட்டு இதை வெளியிடலாம் என்று நினைத்ததால் இன்று இதனை வெளியிடுகிறேன்.. இது இராதாகிருஷ்ணன் பார்த்திபன்  இடும் ‘கோடிட்ட இடங்களை  நிரப்புக’. 

சத்யாவின் இசையில்  ‘கண் மூடினால் தெரிவேனே – எனைத் தொட  நாடினால் மறைவேனே…’ என்ற மதன் கார்க்கியின் பாடல் யூ(த்)தர்களின் இதய ATM-ஐ களவாடும் என்பதில் எனக்கு ஐயமில்லா ஜெயமுண்டு..!”




error: Content is protected !!