full screen background image

பழங்கால மருத்துவ சிகிச்சை பற்றிய கதைதான் ‘பண்டுவம்’ திரைப்படம்..!

பழங்கால மருத்துவ சிகிச்சை பற்றிய கதைதான் ‘பண்டுவம்’ திரைப்படம்..!

ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக P.குணசேகரன் தயாரிக்கும் படத்திற்கு ‘பண்டுவம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘பண்டுவம்’ என்றால் சுத்தத் தமிழில் ‘ரண சிகிச்சை’ என்று பெயராம். பழங்கால மருத்துவ சிகிச்சையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்தப் பெயராம்..

இந்த படத்தில் சித்தேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘மைதானம்’, ‘சாட்டை’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தின் இயக்குனர் கீட்டன் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இவர் பிரபல நடிகர் வாகை சந்திரசேகரின் அண்ணன் பாண்டியனின் மகன். இவர் இராம நாராயணனிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். மற்றும் ஆண்டனி, கார்த்திக்., எம்.பகதூர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – முத்ரா

இசை – நீரோ

பாடல்கள் – பத்மாவதி

கலை – – விஜய் ஆனந்த்

எடிட்டிங் – யோகா பாஸ்கர்

ஸ்டண்ட் – விஜய்

நடனம் – ராதிகா

தயாரிப்பு நிர்வாகம் – ராஜேந்திரன்

தயாரிப்பு மேற்பார்வை – கே.பாலகுமார்

எழுத்து-இயக்கம் – கீட்டன்

தயாரிப்பு – P. குணசேகரன்

படம் பற்றி இயக்குனர் கீட்டன் பேசும்போது “இந்த கதை மருத்துவம் சம்மந்தப்பட்ட பின்னணியை கொண்டு உருவாகி உள்ளது. நிச்சயம் தமிழ்ச் சினிமாவுக்கு இது புதிதான கதை. கூடவே கல்லுரி மாணவர்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்கையையும் பதிவு செய்திருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது…” என்று கூறினார்.

Our Score