‘பண்டுவம்’ என்ற தலைப்புக்கு தமிழில் என்ன அர்த்தம்..?

‘பண்டுவம்’ என்ற தலைப்புக்கு தமிழில் என்ன அர்த்தம்..?

ஜி.எஸ். டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக P.குணசேகரன் மூலக்கதை எழுதி தயாரிக்கும் படம்  ‘பண்டுவம்.’

இந்தப் படத்தில் சிதேஷ் கதாநாயகனாக  நடித்திருக்கிறார்.  இவர் ‘அப்பாவி’, ‘இவனும் ஒரு பணக்காரன்’ ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர் ‘சாட்டை’    படத்தில்      சமுத்திரகனிக்கு          ஜோடியாக  நடித்திருக்கிறார்.  மற்றும் எஸ்.சிவகுமார், சுயம்பிரகாஷ், அனிமல் ஆண்டனி, அமிதா டேஸ், லாலிதயா, திவ்யா, ரிஷா, சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வசனம்   –  சிவா

ஒளிப்பதிவு    –    முத்ரா

இசை    –    நிரோ

பாடல்கள்   –  பத்மாவதி

கலை  –   –  விஜய் ஆனந்த்

எடிட்டிங்    –  யோகா பாஸ்கர்

ஸ்டன்ட்     –   விஜய்

நடனம்    –  ராதிகா

தயாரிப்பு நிர்வாகம்   –  ராஜா

தயாரிப்பு  மேற்பார்வை  –   கே.பாலகுமார்

மூலக்கதை,  தயாரிப்பு   –   P. குணசேகரன்

திரைக்கதை இயக்கம் –  எஸ்.சிவகுமார்

படம் பற்றி இயக்குனர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம்….

“இதுவொரு திரில்லர் கதை.. மருத்துவக் கல்லுரி ஒன்றில் நடக்கும் கதை! மருத்துவக் கல்லுரி ஒன்றில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவனை கோபமுள்ள முரடனாக்குகிறது. பழி வாங்கத் துடிக்கிறான். அவன் யாரை எதற்காக பழி வாங்கத் துடிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பின் மூலம் சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.   படம் விரைவில் திரைக்கு வருகிறது…” என்றார் இயக்குனர் எஸ்.சிவகுமார்.

ஆமாம்.. இந்த ‘பண்டுவம்’ என்ற தமிழ் வார்த்தைக்கு என்னதான் அர்த்தமாம்..?