புதையல் வேட்டையை நடத்த வரும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம்

புதையல் வேட்டையை நடத்த வரும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம்

ஹெட் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ள திரைப்படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி.’

இந்தப் படத்தில் நாயகனாக நிஷாந்த் அறிமுகமாகியுள்ளார். மேலும் விஜய் சத்யா, செல்லா, பாலாஜி, மு சந்திரகுமார், வியன், பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஹெட் மீடியா ஒர்க்ஸ், தயாரிப்பாளர் – விக்னேஷ் செல்வராஜ், இணை தயாரிப்பு – வியன், கார்த்திக் பார்த்தசாரதி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன். ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ், படத் தொகுப்பு – ராம், சதீஷ், இசை – சுரேன் விகாஷ், இசை வடிவம் – சிவக்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாலா அரன்.

ஒரு நல்ல கதைக் களத்திற்கு உரிய வரவேற்பையும், ஆதரவையும் தமிழ்த் திரையுலகம் எப்போதும் தந்து வந்திருக்கிறது என்பதால் இப்படம் முழுவதுமே புதுமுகங்களே நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஒரு டார்க் காமெடி திரைப்படம்.  கதைக் களம் தமிழ்த் திரையுலகில் மிக அரிதான ‘புதையல் வேட்டையை’ மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை.

பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

முழுக்க முழுக்க நகைச்சுவையோடு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இதுவரை அணுககப்படாத விலக்கப்பட்ட அல்லது இருண்ட காமெடி வகையை சார்ந்தாலும், ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலா அரன்.

இப்படத்தை, ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
error: Content is protected !!