இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செம்ம’ திரைப்படம்

இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செம்ம’ திரைப்படம்

இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் P.ரவிச்சந்திரனின் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'செம்ம'. இந்தப் படத்துக்கு வசனத்தையும் இயக்குநர் பாண்டிராஜே எழுதுகிறார்.  

இந்தப் படத்தில் G.V பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போதைய நிலையில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகும் 6-வது படம் இது. அர்த்தனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா ஆகியோரும் நடிக்கின்றனர். ஜனா என்ற புதுமுகம் வில்லனாக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு - விவேக் ஆனந்த், இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் - யுகபாரதி, ஏகாதசி,  படத் தொகுப்பு - பிரதீப் E.ராகவ், கலை இயக்கம் - J.K..அருள்குமார், எழுத்து, இயக்கம் – வள்ளிகாந்த்.

semma-movie-poster-1

இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய உதவியாளரான வள்ளிகாந்த்தை இப்படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.  வள்ளிகாந்த் தன் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக சொல்ல அந்தக் கதையை மிகவும் ரசித்த பாண்டிராஜ். இதை தாமே தயாரிக்கலாமே என்று முடிவு செய்து தயாரித்திருக்கிறாராம்.

காதலும், நகைச்சுவையும் கலந்த இந்தப்படம் திருச்சி சென்னை பின்புலத்தில் தயாராகி, தற்போது படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.