தனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..!

தனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளியாகிறது..!

முதன்முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் ஹாலிவுட் படமான பக்கிரி படத்தினை YNOTX நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. 

‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ என்னும் பிரெஞ்ச்-ஆங்கில படமே தமிழில் ‘பக்கிரி' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது.

கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ் எறேரா பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் பாடலாசிரியராக பணி புரிந்திருக்கிறார்.

 DHANUSH

'பக்கிரி' திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் சிறந்த கதைக் களத்தை மையமாக கொண்ட திரைப்படங்களை இந்திய-தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், அடுத்த நிலைக்கு தன்னை உயர்த்தி இருக்கிறது YNOTX நிறுவனம்.

இது குறித்து YNOTX நிறுவனத்தின் சஷிகாந்த்கூறுகையில், “இந்த குறிப்பிடத்தக்க படத்தை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், நடிகர் தனுஷின் திரை ஆளுமை, திரைப்படத்தின் கருத்துடன் இணைந்து, இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அவதாரத்தில் அவர் நடித்திருக்கும்விதம், சினிமா ரசிகர்களுக்கும், தனுஷின் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் எங்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி” என்றார்.

IMG_9962

நடிகர் தனுஷ் கூறுகையில் “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...” என்றார்.

COMMUNIQUE FAKIR - BERENICE BEJO ET DHANUSH

படத்தின் இயக்குநரான கென் ஸ்காட் பேசுகையில், “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஒப் தி ஃபகீர்’ ஒரு இகியா துணி அலமாரியில் அடைபட்டு கிடக்கும் ஒரு பகீரின் நீதிக் கதை.  இக்கதை வாய்ப்புகள், கர்மா, மற்றும் சுய விருப்பங்களை மையமாக கொண்டது. இது மும்பையில் வசிக்கும் ஒரு அண்டை வீட்டு சிறுவன், தன்னை அறியும் நோக்கில் ஐரோப்பாவை சுற்றி வந்த ஒரு எச்சரிக்கை கதை.

IMG_3238 DHANUSH

இந்த இதயப்பூர்வமான காமெடி திரைப்படத்தை படமாக்கும் தருணம், பல திறமையான இந்திய நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தனுஷ் ஒரு மிகச் சிறந்த நடிகர். அவர் காமெடி டச்சுடன் ரசிகர்களை ஈர்க்கும்விதம் அலாதியானது.  ஒவ்வொரு நாளும் தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதை அழகைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்..." என்றார்.

இந்த ‘பக்கிரி’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.