பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

தமிழக அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களின் நலனுக்காக 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் பெப்சி மூலம் திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே அடிக்கல் நாட்டினார்.

இதற்கான விழாவில் பையனூரில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், திரைப்பட இயக்குனர்கள் நாஞ்சில் பி.சி.அன்பழகன், ரவி மரியா, பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

paiyanoor-quarters-stone-function-4

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதியன்று பையனூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், "ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.." என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதியன்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

paiyanoor-quarters-stone-function-2

இதன் தொடர்ச்சியாக தற்போது 2-ம் கட்டமாக ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.