ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’.

Marram Movies மற்றும் Bharani Movies  பெருமையுடன் வழங்கும் திரைப்படம் ‘பகடி ஆட்டம்’. 

இந்தப் படத்தில் ரகுமானுடன் அகில், கௌரி நந்தா, நிழல்கள் ரவி, சுரேந்தர், மோனிகா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ,  சுதா,  சிசர் மனோகர், சுப்புராஜ், கோவை செந்தில், ‘சாட்டை’ ரவி, ‘பாய்ஸ்’ ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் – ராம் கே.சந்திரன், இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – கே.ஸ்ரீனிவாஸ், பாடல் – கார்த்திக் ராஜா, விஜய் சாகர், கலை – சண்முகம், நடனம் – ராஜ் விமல், மக்கள் தொடர்பு – எஸ்.குமரேசன். தயாரிப்பு – குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர், வெளியீடு : V.T நிறுவனம்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம்.கே.சந்திரன் பேசும்போது, “எல்லா வசதியும் கொண்ட ஒரு ஆணுக்கும்,  அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழும் பெண்ணுக்கும் இடையேயான கதைதான் ‘பகடி ஆட்டம்’. 

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைத்தளங்கள் எப்படி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்.

சமூக வலைத்தளம் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார். குடும்பங்களும் ரசிக்கும்விதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்..” என்றார்.

‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டார்.

போஸ்டரை வெளியிட்டு பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “சென்ற ஆண்டில் இளம் இயக்குநர்கள் இயக்கிய ‘உறியடி’, ‘மெட்ரோ’, துருவங்கள் 16’ ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் இந்த ‘பகடி ஆட்டம்’ படமும் நிச்சயம் இடம் பிடிக்கும்…” என்று இயக்குநர் பாண்டிராஜ் நம்பிக்கையுடன் கூறினார்.