புதுமுகங்கள் நடிக்கும் ‘படைப்பாளன்’ திரைப்படம் இன்று துவங்கியது..!

புதுமுகங்கள் நடிக்கும் ‘படைப்பாளன்’ திரைப்படம் இன்று துவங்கியது..!

LS.Thian Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்.எஸ்.பிரபு ராஜா தயாரித்து எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் ‘படைப்பாளன்’.

இந்தப் படத்தில் ராமர் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், ஜான்வி என்கிற புதுமுகம் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர்.

படத்தில் மேலும், ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த இரட்டையர்களான விக்கி, ரமேஷ் இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

மற்றும், ‘அருவி’ பாலா, ஜெட்டி ஜெகன், சந்தோஷ், மயில்சாமி, ‘காதல்’ சரவணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – எஸ்.எஸ்.பிரபு ராஜா, இணை தயாரிப்பு – டாக்டர் கே.கருணாகரன், ஒளிப்பதிவு – முருகன், இசை – வி.டி.பாரதி, வி.டி.முனீஸ், படத் தொகு்பபு – நிரஞ்சன், கலை இயக்கம் – பாலாஜி, நடன இயக்கம் – பாபா பாஸ்கர், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், பாடல்கள் – லோகேஷ், உடை வடிவமைப்பு – என்.குருசாமி, தயாரிப்பு நிர்வாகம் – அறந்தை பாலா, மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை வடபழனி ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் , இவர்களுடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ருக்மாங்கதன், தருண் கோபி ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.