விஜய்-அமலாபால் காதல் பற்றி எனக்குத் தெரியாது – சமாளிக்கிறார் இயக்குநர் பார்த்திபன்..!

விஜய்-அமலாபால் காதல் பற்றி எனக்குத் தெரியாது – சமாளிக்கிறார் இயக்குநர் பார்த்திபன்..!

நடிகர் பார்த்திபன் சமயோசித புத்திக்காரர். தமிழ்த் திரையுலகில் இருக்கும் ஞானகிறுக்கன்களில் இரண்டாமவர்.

சமீபத்தில் நடந்த ‘சைவம்’ படத்தி்ன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், “திருவள்ளுவருக்குக்கூட அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று பால்களைத்தான் தெரியும். திருவள்ளுவரைவிட, இயக்குநர் விஜய் பெரிய ஆள். அவருக்கு அமலாபாலையே தெரியுமே..!!!” என்று பேசியிருந்தார்.

இது ‘சைவம்’ படத்தைவிடவும் விஜய்-அமலாபால் காதலுக்கு பால் ஊற்றியது போல பற்றிக் கொண்டது.. அடுத்த ஒரு வாரத்திலேயே இருவருக்கும் திருமணம் என்கிற செய்தியும் உறுதியானது. இது பற்றி ‘குமுதம்’ இதழுக்கு பேட்டியளித்திருக்கும் பார்த்திபன் “விஜய்-அமலாபால் காதல் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது…” என்று சாதித்திருக்கிறார்.

 “மறைக்காம சொல்லணும்னா எனக்கு அமலாபால்-விஜய் லவ் மேட்டரே தெரியாது. சைவம் ஆடியோ ரிலீஸ் மேடைக்கு வர்றவரைக்கும் நான் இதைத்தான் பேசப் போறோம்னு முன் முடிவோட வரலை. அங்க வந்தப்புறம்தான் அமலா வர்றதை பார்த்தேன். அப்ப மனசுல தோன்றுன விஷயத்தை வைச்சே கலகலப்பா இருக்குமேன்னுதான் அபபடி பேசினேன்.  

மேடையில கலகலப்பா நாலு வார்த்தை பேசினாத்தான் மைக் கொஞ்ச நேரமாவது நம்ம பக்கம் நிற்கம். ஜோக்கா சொன்ன விஷயம். சத்தியமா அது அமலா கல்யாணம்வரைக்கும் போய் நிற்கும்னு எனக்குத் தோணலை.

அப்படிச் சொன்னா ஆடியன்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமா கை தட்டுவாங்க.. அதான் என் முதல் நோக்கம். அப்புறம் அமலாவோட நல்ல பிரெண்ட்ஷிப் எனக்கிருக்கு. விஜய் எனக்கு நெருங்கிய நண்பர். அப்படியே அவர் கேட்டாலும் காமெடிக்காக சொன்னேன்னு சொல்லிடலாம்னுதான் யோசிச்சிருந்தேன். அது அவங்க கல்யாணத்துல வந்து சேரும்ன்னு சுத்தமா எனக்குத் தோணவே இல்லை..

எனக்கு மேடைல கலகலப்பா பேசப் பிடிக்கும். கிடைக்குற வாய்ப்புல நாலு நிமிஷம் ஜோக் அடிச்சிட்டு ஒரு நிமிஷத்தை மெஸேஜ் சொல்றதுக்கு பயன்படுத்திக்கிறேன். நான் மேடைக்காக அலங்காரமா பேசுறது இப்படி பல நேரம் பயர் மாதிரி பரபரப்பா பத்திக்கிடுது..” என்று சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.

ஜமுக்காளத்துல வடி கட்டின பொய்யுன்னு எதிர்காலத்துல எதையாவது உதாரணமா காட்டணும்னா அண்ணன் பார்த்திபன் சொன்ன இதையும் தாராளமா நாம சொல்லிக்கலாம்.

தமிழ்நாட்டில் வர்ற முன்னணி பத்திரிகைகள் ஒண்ணுவிடாம வாசித்து வரும் படிப்பாளி ப்ளஸ் படைப்பாளி பார்த்திபன் அண்ணனுக்கு அவங்க லவ் மேட்டர் தெரியவே தெரியாதாம்..  இதுவே மிகப் பெரிய உடான்ஸ்.. அவங்க லவ்வை பத்தி எழுதாத பத்திரிகைகளே கிடையாது.. அப்புறம் எப்படி..?

அதே சமயம்,  “அப்படிச் சொன்னா ஆடியன்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமா கை தட்டுவாங்க.. அதான் என் முதல் நோக்கம்…” என்றும் சொல்கிறார்.  அப்போ இப்படிப் பேசினா விழாவுக்கு வந்திருக்கும் வி.ஐ.பி.க்கள் இதுக்கு நல்லா கை தட்டுவாங்கன்னு அவருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குன்னுதான அர்த்தம்..  அப்போ எதுக்காக அவங்க இதுக்கு கை தட்டுறாங்க.. கை தட்டப் போறாங்கன்னு மட்டும் தெரியாதாக்கும்..? காரணமே இல்லாம கை தட்டுறதுக்கு அவங்க என்ன அரை லூஸுகளா..?

அண்ணன் பார்த்திபன் நிசமாவே நம்மளை லூஸாக்கப் பார்க்குறார்..!!!




error: Content is protected !!