கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’ ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ’3’ ஆகிய படங்களை தயாரித்த இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ஆர்.கே.புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பாண்டி முனி’.

இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ‘முனி’ என்கிற அகோரி  வேடத்தில் நடிக்க,   புதுமுக நடிகையான மேகாலி ‘பாண்டி’ என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல்,  பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே,  அம்பிகா, வாசு விக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மது அம்பாட், இசை – ஸ்ரீகாந்த் தேவா, கலை – ஸ்ரீமான் பாலாஜி, நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா. இது இவர் இயக்கும் 23-வது படமாகும்.

படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும், காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான், இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

சாமிக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போர்தான் இந்த ‘பாண்டி முனி’ திரைப்படம். அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்கு இருக்கும்.

இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாது மலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது..” என்றார்.
error: Content is protected !!