வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் 5 மொழிகளில் தயாராகும் ‘பாம்பாட்டம்’

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் 5 மொழிகளில் தயாராகும் ‘பாம்பாட்டம்’

‘6.2’, ‘ ஓரம்போ’, ‘வாத்தியார்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன்  நிறுவனத்தின் தயாரிப்பாளரான V.பழனிவேல் அடுத்து   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்.’

தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் இயக்குநரான வி.சி.வடிவுடையான், ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார்.

‘காக்க காக்க’, ‘திருட்டுப் பயலே’, ‘நான் அவனில்லை’ போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர்  படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்திரைப்படம் உருவாகிறது.

ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு - இனியன் J. ஹரீஸ், இசை - அம்ரீஷ், பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ், சண்டை இயக்கம் - சூப்பர் சுப்பராயன், வசனம் - பா.ராகவன், மக்கள் தொடர்பு - புவன், இணை தயாரிப்பு - A.பன்ணை இளங்கோவன், தயாரிப்பு - V.பழனிவேல், கதை, திரைக்கதை, இயக்கம் – வி.சி.வடிவுடையான்.

முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில்  நடைபெறவுள்ளது. இம்மாதம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.