மலேசிய திரையுலக விழாவில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இசை வெளியிடப்பட்டது..!

மலேசிய திரையுலக விழாவில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இசை வெளியிடப்பட்டது..!

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில், ‘Amme Nararyana Entertainment’ மற்றும் ‘7C’s Entertainment Private Limited’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில்  நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமரிசையாக  நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

oru nalla naal paathu solrean-audio-function-stills

இந்தப் படத்தின் இசையை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் டத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரன் ராமமூர்த்தியும்  இணைந்து வெளியிட்டனர்.

வெளியான உடனேயே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர், யூ டியூபில் மூன்று மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணிப்பு மேலும் ஒரு பெரிய செய்தியால் ஊர்ஜிதமாகியுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது என்பதே இந்த பெரிய செய்தியாகும்.

குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களை மட்டுமே வாங்கும் சன் டிவி, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ளது இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது.

இதனால் மிக  விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.