விநியோகஸ்தர்களின் போட்டியில் சிக்கியிருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம்

விநியோகஸ்தர்களின் போட்டியில் சிக்கியிருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம்

ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வியாபார சக்தி நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும்  படங்களே வெற்றி பெறும் படங்களாக  இருக்கும்.

அந்த வகையில் தயாராகியிருக்கும் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஒரு நல்ல  நாள் பாத்து  சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

‘7c’s Entertainment Private Limited’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘Amme Narayana Entertainment’ ரிலீஸ் செய்யவுள்ளது.

actor vijay sethupathy

ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்திற்கு கோவிந்தராஜ் படத் தொகுப்பு செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி வருகிறார்.

நவம்பர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஆனால் இப்போதே இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்களிடையே பெரும் போட்டி தொடங்கி உள்ளது.

இதற்கு நடிகர் விஜய் சேதுபதியின் அசுர வளர்ச்சியும், நடிகர் கவுதம் கார்த்திக்கின் வெற்றி பயணம் தொடங்கியுள்ளதும்தான் காரணம்  என கூறப்படுகிறது.