ரகுமானின் நடிப்பில் முத்திரை பதிக்க வரும் ‘ஒரு முகத்திரை’

ரகுமானின் நடிப்பில் முத்திரை பதிக்க வரும் ‘ஒரு முகத்திரை’

‘துருவங்கள்-16’ வெற்றிக்கு பிறகு ரகுமான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஒரு முகத்திரை’ படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தில் ரகுமான், ஆர்.சுரூஸ், அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, ரவி, ரேகா சுரேஷ், பாண்டு, மாஸ்டர் மித்திலேஷ், பேபி சக்தி அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

கலை – வினோத் ரவீந்திரன், நடனம் – பாபி, அருண் குமார், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், பி.ஆர்.ஓ. – நிகில், ஒளிப்பதிவு – ஷரவண பாண்டியன், இசை – பிரேம்குமார் சிவபெருமான், பாடல்கள் – மதன் கார்க்கி, அண்ணாமலை, பிரியன், ஜிபீ, தயாரிப்பு நிர்வாகம் – கன்னூர் நிர்மல், தயாரிப்பு – ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம் – ஆர்.செந்தில்நாதன்.

GS Cinemas

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தர் ஞானசேகரனின் GS Cinemas நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘கவலை வேண்டாம்’ வெற்றி படத்திற்கு பிறகு GS Cinemas வெளியிடும் இரண்டாவது படம் ‘ஒரு முகத்திரை.’

“ஒரு முகத்திரை’ படத்தில் பேஸ்புக்குதான் கதாநாயகன். வில்லனும் அதே பேஸ்புக்குதான். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐ.டி. துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.  ஒரு சைக்காலஜிக்கல் டாக்டரே சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறேன்..” என்றார் இயக்குநர் செந்தில்நாதன்.




error: Content is protected !!