full screen background image

இனிமேல் திரைப்படங்களின் டைட்டிலில் ஹீரோயின் பெயர்தான் முதலில் வர வேண்டுமாம்..!

இனிமேல் திரைப்படங்களின் டைட்டிலில் ஹீரோயின் பெயர்தான் முதலில் வர வேண்டுமாம்..!

‘ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்’  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா(‘காக்கா முட்டை’ மணிகண்டனின் உதவி இயக்குநர்) இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

இந்தப் படத்தில் விதார்த் ஹீரோவாக நடிக்க, பிரபல டப்பிங் கலைஞரான ரவீனா இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், இசை – ராம், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன் கலை இயக்கம் – டி.கிராபோர்ட். எழுத்து, இயக்கம் – சுரேஷ் சங்கையா.

மகளிர் தினத்தை முன்னிட்டு,  ‘ஒரு கிடாயின் கருணை மனு’  குழுவினர், தங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவிற்காக  ஒரு குறும்  காணொளியை வெளியிட்டுள்ளனர்.   

“ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள்தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்…? அவர்கள்தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும்,  ‘ஒரு கிடாயின் கருணை மனு’  படக் குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கியிருக்கிறோம்.

இதுவரையிலும் அனைத்து திரைப்படங்களின் டைட்டில்களிலும்  கதாநாயகர்களின் பெயர்தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை  ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் முதல் இடத்தில் குறிப்பிடப் போகிறோம். எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினரின் சார்பிலும் ‘மகளிர் தின’ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்…” என்று உற்சாகமாக கூறினார் நடிகர் விதார்த்.

படக் குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ இங்கே :

Happy Women’s Day from “Oru Kidayin Karunai Manu” Team.

Movie: Oru Kidayin Karunai Manu
Cast: Vidharth, Raveena
Directed by: Suresh Sangaiah
Music: M.Raghuraam
Cinematography: R.V. Saran
Editing : Praveen K.L

Our Score