விரைவில் வெளியாகிறது ‘ஒரு கனவு போல’ திரைப்படம்

விரைவில் வெளியாகிறது ‘ஒரு கனவு போல’ திரைப்படம்

இறைவன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் C.செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘ஒரு கனவு போல.’ 

இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன்,  சௌந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக புதுமுகம் அமலா நடித்திருக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி,  மயில்சாமி,  வெற்றிவேல் ராஜா,  கவி பெரியதம்பி,  வின்னர் ராமச்சந்திரன்,  ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோரும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.                                           

கலை – எம்.டி.பிரபாகரன், நடனம் – எஸ்.எல்.பாலாஜி, ஒலிப்பதிவு –  ஜி.தரணிபதி, ஒளிப்பதிவு – அழகப்பன்.N, இசை – E.S.ராம், பாடல்கள் – புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், படத் தொகுப்பு – சாபு ஜோசப், சண்டை பயிற்சி – பி.தியாகராஜன்,  தயாரிப்பு மேற்பார்வை – எம்.செந்தில், தயாரிப்பு – சி.செல்வகுமார்,  எழுத்து, இயக்கம் – வி.சி.விஜய்சங்கர்.

படம் பற்றி இயக்குநர் வி.சி.விஜய்சங்கர் பேசும்போது, “நமக்குள் தோன்றும் வன்முறையான எண்ணங்களை, வெளியிட முடியாத உணர்வுகளை நாமே புரிந்து கொண்டு சமூக நீதிக்கு ஏற்ப நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்  என்பதை உளவியல் ரீதியாக உணர்த்தும் திரைப்படம் இது.

நட்பின் ஆழத்தையும் – கற்பின் அர்த்தத்தையும்  இந்த திரைப்படத்தில்  அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். பெண்மையின்  உள் உணர்வுகளை இதில்  அதிகமாக  அலசி இருக்கிறோம்.

இதுவரை சொல்லப்படாதவிதத்தில் திரைக்கதையின் பயணம்  இருக்கும். படத்தில் எல்லா இடங்களிலும் பாசிட்டிவான விஷயங்களே நிறைந்திருக்கும்…” என்றார் இயக்குநர் V.C.விஜய்சங்கர்.