ரகுமான்-அபிநயா நடிக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ திரைப்படம்

ரகுமான்-அபிநயா நடிக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ திரைப்படம்

‘துருவங்கள் 16’ படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம், ‘ஆபரேஷன் அரபைமா’.

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

Abinaya (2)

படத்தில் ‘நாடோடிகள்’ அபிநயா நாயகியாக நடிக்கிறார். மேலும், டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக்,   மணிஷா மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Rahman (1)

இசை – ராகேஷ் பிரம்மானந்தம்,  ஒளிப்பதிவு – ஃபீனிக்ஸ் உதயன், படத் தொகுப்பு – விஜயகுமார், ஷைஜூ, பாடல்கள் – முருகன் மந்திரம்,  வசனம் – ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம், இணை இயக்குநர் – சஜி சுரேந்திரன், சண்டை இயக்கம் – கேப்டன் அனில்குமார்(Rtd NSG Commando Trainer), & கமாண்டோ அஜித்குமார் (Thunderbolt Commando Chief, Kerala Police). நிர்வாகத் தயாரிப்பு – சுஜித் சுதர்சன், க்ரீன் லைன் கண்ணன், அப்பு, ஜெயின் ஜார்ஜ், ஷைஜூ யோஹனன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ஏழுமலை சரவணன், பாதுஷா, தயாரிப்பு மேலாளர் – கவி சேகர், ஷின்ஜோ, ஜிதேஷ், நிரேஷ், புகைப்படங்கள் – வித்யாசாகர், ஒப்பனை – லிபின், விளம்பர வடிவமைப்பு – ஸ்ரீஸ்டி பிரின்ஸ், VFX – கேமரூன் ஃப்ளிக்ஸ் இசை வெளியீடு – ராஜீவம் மியூசிக், கதை, திரைக்கதை, இயக்கம் – ப்ராஷ், தயாரிப்பு – டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ்.

Abinaya (3)

இப்படத்தின் இயக்குநரான ப்ராஷ், பிரபல இயக்குநர்களான டி.கே.ராஜிவ்குமார் மற்றும் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் உடையவர் இயக்குநர், ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகவும் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahman, Dir Prash

இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், “நேர்மையும், துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது,

சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சுஅசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில்  மிகுந்த பொருட் செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது…” என்றார்.
error: Content is protected !!