முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சந்தானம்

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சந்தானம்

வாசன் பிரதர்ஸ்  - சிவஸ்ரீ பிக்சர்ஸ் -  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் தங்களது சகாப்தத்தை அழுத்தமாக பதித்துள்ள இந்த தயாரிப்பாளர்கள் இதுவரையிலும் 55 சாதனை படங்களைத் தயாரித்துள்ளார்கள்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’, ‘நிமிர்ந்து நில்’ போன்ற சமீபத்திய படங்களை தொடந்து தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

img_5945

இதை தொடர்ந்து  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ்  பட நிறுவனம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கிற படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக அமோரா லிஸிர் நடிக்கிறார். மற்றும்  ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன்,  ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு,  மயில்சாமி,  கோவை சரளா இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்களும்  நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - கோபிநாத், இசை – ஜிப்ரான், கலை – வனராஜ், சண்டை பயிற்சி – சில்வா, படத் தொகுப்பு – ராமாராவ், தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், எழுத்து, இயக்கம் – கே.எஸ்.மணிகண்டன்.

படம் பற்றி இயக்குநர் மணிகண்டன் பேசும்போது, "இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்தது. சந்தானம் இதுவரையிலும் சில படங்களில்தான் ஒரு சில காட்சிகளில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் நாயகனாகவே நடிக்கிறார்.

img_6090

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ எப்படி அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இருந்ததோ, அதேபோல் இந்த படமும் மக்களுக்கு பிடித்த காமெடி கலக்கல், அதிரடி ஆக்ஷன்  படமாகவும் இருக்கும். மக்கள் திலகம் எம்ஜி.ஆர். அவர்களின் ஹிட் பாடலான ‘ஓடி ஓடி உழைக்கணும்’  என்ற தலைப்பை எங்கள் படத்திற்கு வைப்பது எங்களுக்கு பெருமை. இதன் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கி தொடர்ந்து  25  நாட்கள் நடைபெற உள்ளது.." என்றார்.