‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘ஓடு ராஜா ஓடு’.!

‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘ஓடு ராஜா ஓடு’.!

‘ஜோக்கர்’ படத்தின் ஹீரோவான குரு சோமசுந்தரம் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். ஜதின்-நிஷாந்த் என்ற இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் காமெடி திரில்லர் படமாக உருவாகி வரும் ‘ஓடு ராஜா ஓடு’ படத்தில்தான் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்தித்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சோமசுந்தரத்துடன் நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Stills 1

புகைப்படம் – ஜதின் சங்கர் ராஜ், படத் தொகுப்பு – நிஷாந்த் ரவீந்திரன், இசை – தோஷ் நந்தா, ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், ஏ.எம்.ரஹ்மத்துல்லா, திரைக்கதை – நிஷாந்த் ரவீந்திரன், தயாரிப்பாளர் – விஜய் மூலன், விநியோக நிறுவனம் – விஜய் மூலன் டால்கீஸ் மற்றும் கேண்டில் லைட் ப்ரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் – ஜதின், நிஷாந்த்.

“இந்த ‘ஓடு ராஜா ஓடு’ திரைப்படம் ஒரு காமெடி திரில்லர் படம். காமெடியிலும் Dark Humour கதையாக இருக்கும்…” என்கிறார் இயக்குநர் ஜதின்.

மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ப்ரமோ பாடல், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
error: Content is protected !!