ஹீரோயின் அமேரா தஸ்தூரின் ஆட்டத்தை பார்த்து மெய் மறந்த ஹீரோ சந்தானம்..!

ஹீரோயின் அமேரா தஸ்தூரின் ஆட்டத்தை பார்த்து மெய் மறந்த ஹீரோ சந்தானம்..!

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’.

இந்தப் படத்தில் ஹீரோவாக சந்தானம் நடித்திருக்கிறார். ஹீரோயினாக அமேரா தஸ்தூர் நடித்துள்ளார்.

மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சு சுப்பு, ராதாமணி இவர்களுடன் இன்னும் ஏராளமான நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோபிநாத், இசை – ஜிப்ரான், கதை – ஞானகிரி, கலை – வனராஜா, சண்டை பயிற்சி – சில்வா, படத் தொகுப்பு – ராமாராவ், நடனம் – அசோக்ராஜா, தயாரிப்பு நிர்வாகம் – மகேஷ், தயாரிப்பு மேற்பார்வை – பாலகோபி, மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, தயாரிப்பு – கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.எஸ்.மணிகண்டன்.   

‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

ஹீரோயின் அமேரா தஸ்தூர் ஜாலியாக ஆடி பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழிப் பூங்காவில் அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அவர் ஜாலியாக ஆடிப் பாடும் அழகை சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படமாக்கினர்.

ஜாலியான ஒரு கதையில் கமர்ஷியலாகவும், நகைச்சுவை கலந்தும் படத்தை உருவாக்கியிருக்கிறார் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றி படத்தின் இயக்குநரான கே.எஸ்.மணிகண்டன்.
error: Content is protected !!