கன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

கன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குநர் நாகஷேகர்.  

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ்.யசோதரா ஆகியோருடன் இணைந்து ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது.

இப்படத்தை கதை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் நாகஷேகர், படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் கன்னட படவுலகில் இயக்குநராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்தவவர்.

‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர் இவர்.

இவர் இப்போது முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையானதொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ்த் திரையுலகில் தடம் பதிக்கிறார்.

இந்தப் படத்திற்கு சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய,  பிரீத்தம் திரைக்கதை எழுத, இயக்குநர் விஜி வசனம் எழுத, ரூபன் படத் தொகுப்பை கவனிக்க, லால்குடி N.இளையராஜா கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.

மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு திலீப் சுப்புராயன் பொறுப்பேற்க, நிர்வாக தயாரிப்பினை வேணு வேல்முருகன் மேற்கொள்கிறார்.

வசூலில் சாதனை படைத்த இயக்குநர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, தற்போது மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய திரைப்படம் குறித்து இப்படக் குழுவினர் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.




error: Content is protected !!